
குன்றத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தார்.
குன்றத்தூர், நகராட்சி சார்பில் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக வைக்கப்பட்ட 9 அடி உயர வெண்கல அம்பேத்கர் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, அமைச்சர் அன்பரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தனர். பின்னர், திருமாவளவன் அம்பேத்கர் பெயரை நிறுவியதற்குத் திமுகவிற்கு மிக பெரிய பங்கு உள்ளது எனக் கூறி உரையாற்றினார். இதையடுத்து, துனை முதல்வர் பேசிய போது திமுக அரசியல் கூட்டணி அல்ல கொள்கைக் கூட்டணி என நிரூபித்து காட்ட வேண்டும் என்று கூறினார்.


