Advertisements

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியதுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை குவித்தது.
இதில், மிகவும் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது. தொடர்ந்து, இந்தப் போட்டியில் 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
மேலும், சஞ்சு சாம்சன் தான் விளையாடிய 5 போட்டிகளில் 3 அரை சதங்கள் உள்பட 321 ரன்கள் குவித்தார். இதனால், அவருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா போட்டியை நடத்திய நாடு என்ற முறையில், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து, 3 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற ஒரே அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
Advertisements




