பாரதிதாசன் பிறந்தநாள் –  முதலமைச்சர்  மரியாதை!

Advertisements
பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவருடைய உருவச் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில், அவர் பிறந்த நாளான இன்று முதல், மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் “தமிழ் வாரம்” கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது. மேலும், பாரதிதாசனின் 135-வது பிறந்தநாளான இன்று, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவருடைய உருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *