
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் அணியை எளிதில் வென்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் இருபது போட்டி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 13.1 ஓவர்கள் மட்டுமே எடுத்து 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது. குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்களையும் ஷிவம் துபே மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினர். ஐக்கிய அரபு அமீரகம் அணியில் அதிகபட்சமாக ஷரஃபு 22 ரன்களும் கேப்டன் முகமது வாசீம் 19 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்தியா 4.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட முடிவில் அபிஷேக் சர்மா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் இருபது ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் ஏழு ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இந்திய வெற்றிக்கு வழிவகுத்தனர்.


