அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் கருத்து

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை வரவேற்பதாகத் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் கூட்டணிக்குள் வருவேன் என டிடிவி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சி இணைவது குறித்து எந்த வித கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிவித்தார்.

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர் எடுத்திருக்கும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டால் அவரை முதல்வர் வேட்பாளராக நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் பேச வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது என்றும் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அது நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *