Cylinder Price Reduction: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

கடந்த மாதம் ராஜஸ்தானில்  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து  ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைத்தது.

ராஜஸ்தான்  முதல்வராக பஜன் லால் சர்மா பதவியேற்றார். தேர்தலின் போது சில வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. அதன் படி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும்  பா.ஜ.க. அரசு கியாஸ் சிலிண்டர்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்துள்ளது.

நடுத்தர குடும்பம்  முதல் அடித்தட்டு மக்கள் வரை பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர் மிகவும் அத்தியாவசியமானது. விலை கூடுதலாக இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள் என்று , அரசு சலுகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் ரூ. 450-க்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது பேசிய முதலமைச்சர் பஜன் லால் சர்மா, மானிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *