
கடன் கொடுத்தவர் ஆபாசமாகப் பேசி வீட்டைப் பூட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக உடலில் டீசல் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள வஉசி நகர் சேர்ந்தவர் இந்திராணி.இவரது மகன் அசோக்குமார் எம்ஜிஆர் நகரை சேர்ந்த காமாட்சி என்பவரிடம் அசோக்குமார் ரூபாய் 2 லட்சத்தை மூன்று ரூபாய் வட்டி வீதம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனுக்கு மாதம் ரூபாய் 6,000 வீதம் 18 மாதங்கள் வட்டி கட்டி வந்துள்ளார். தற்போது அவருக்குக் கடன் சுமை அதிகமான நிலையில் வட்டி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக என்னால் வட்டி கட்ட முடியவில்லை எனக்கு 6 மாதம் கால அவகாசம் தாருங்கள் நான் எனது வீட்டை விட்டுத் தங்களிடம் வாங்கிய கடனை அடைத்து விடுகிறேன் என்று அவகாசம் கேட்டிருந்தார், ஆனால் கடன் கொடுத்த காமாட்சி ஒரு வாரக் காலத்துக்குள் தனது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுமாறு என்று அசோக் குமாரை நிர்பந்தப்படுத்தியுள்ளார்,
மேலும் காமாட்சியின் மகன் தினேஷ் அவரது கணவர் ஜோதி உறவினர் மோகன் ஆகியோர் சேர்ந்து அசோக்குமாரின் வீட்டுக்குள் புகுந்து ஆபாசமாகப் பேசி மிரட்டியுள்ளனர், மேலும் மருமகளையும் தகாத வார்த்தையால் பேசித் திட்டியுள்ளனர், இதில் அவமானம் அடைந்த இந்திராணி அவரது மகன் அசோக்குமார் ஆகியோர் இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் வந்து தங்களது உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்,
அப்போது அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அவர்கள் இருவரையும் மீட்டு அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி 2 பேரையும் மீட்டு ராணிப்பேட்டை காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அசோக் குமார் கடன் கொடுத்தவர் எனது வீட்டைப் பூட்டி விட்டனர். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கதறினார் இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


