பாகிஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 13-பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் காவல் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், 7 காவல்துறையினர் 6 பயங்கரவாதிகள் என 13-பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், காவல் பயிற்சிப் பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு, டேரா-இஸ்மாயில்கான் மாவட்டத்தில் உள்ள, ரட்டா-குலாச்சி காவல் பயிற்சிப் பள்ளியில், பயங்கரவாதிகள் குழு, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு லாரியை, பயிற்சிப் பள்ளியின் வாயிலில் மோதச் செய்து, சேதத்தை ஏற்படுத்தியது.

அதன்பின் பயங்கரவாதிகள் வளாகத்திற்குள் புகுந்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஐந்து மணி நேர சண்டைக்குப் பிறகு, ஆறு பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் உயிர் மாய்க்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் காவல்துறையினர் ஏழு பேரும், பயங்கரவாதிகள் 6-பேர் என 13 பேர் உயிரிழந்ததாக, அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் பயிற்சி மையத்திலிருந்த 200 பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *