தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Advertisements

பெரும்பாலான இந்திய வீடுகளில் அழகுக்காகவும், திருஷ்டிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு செடி தான் கற்றாழை. இந்தக் கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

எனவே கற்றாழையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம். முக்கியமாக இந்த ஜூஸ் செரிமானத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும் மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும்.

அதுவும் கற்றாழை ஜூஸை வெறுமனே குடிப்பதை விட, வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில் கற்றாழையை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும்.

இப்போது காலையில் எழுந்ததும் லெமன் கலந்த கற்றாழை ஜூஸைக் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதைக் காண்போம்.

1. செரிமானம் மேம்படும்:

கற்றாழையில் உள்ள கலவைகள் செரிமான பிரச்சனைகள் தடுக்கும், அழற்சியைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் இந்தக் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், இது மலச்சிக்கலிலிருந்து விடுவிக்கும்.

இந்த ஜூஸில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி பித்த நீர் உற்பத்தியைத் தூண்டி செரிமானத்திற்கு நன்மை பயக்கும். வெதுவெதுப்பான நீரில் இந்த ஜூஸைக் குடிக்கும்போது, அது செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும்.

2. அழற்சி எதிர்ப்புப் பண்புகள்:

கற்றாழையில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், இது உடலினுள் ஏற்பட்டுள்ள அழற்சியைக் குறைத்து, ஆர்த்ரிடிஸ் அல்லது அழற்சிமிக்க குடல் நோய்களிலிருந்து விடுவிக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது மிகவும் நல்லது.

3. நீரேற்றம்:

லெமன் கலந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, உடல் வறண்டு போகாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும். உடல் நீரேற்றத்துடன் இருந்தால் தான், உடலுறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

4. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்:

கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தப் பெரிதும் உதவுகின்றன.

அதுவும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன.

5. உடல் சுத்தமாகும்:

இந்தக் கற்றாழை ஜூஸானது கல்லீரலை சுத்தப்படுத்தி உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும். அதுவும் இந்த ஜூஸில் உள்ள எலுமிச்சை ஒரு நேச்சுரல் டையூரிக்காகச் செயல்பட்டு, உடலிலிருந்து அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

6. ஆற்றல் மேம்படும்:

நீங்கள் நிறைய சோம்பேறித்தனமாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால் இந்தக் கற்றாழை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் சோர்வு நீங்கி, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படலாம்.

7. எடை இழப்பு:

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், இந்தக் கற்றாழை ஜூஸ் நல்ல பலனைத் தரும். ஏனெனில் கற்றாழை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும்.

மேலும் இதில் உள்ள எலுமிச்சை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், பசியைத் தடுக்கவும் உதவுகிறது.

8. ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடி:

எலுமிச்சை கலந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்ஸிடன்ட்டுகள், சரும அமைப்பையும், தோற்றத்தையும் மேம்படுத்த உதவும்.

அதுவும் கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும், எலுமிச்சை முகப்பருவை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

மேலும் இந்த ஜூஸில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், தலைமுடி உதிர்வதைத் தடுத்து, ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *