திமுக-வை கழற்றிவிட்ட கம்யூனிஸ்ட்! இருந்தா என்ன..? இல்லைனா என்ன.?

Advertisements

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகும் , விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சுழன்றடித்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்… அந்த வகையில் , குடியரசு ஆட்சி அமைந்து விட கூடாது என்று இடது சாரிகளும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவை தவெகவிற்கு தருகிறோம் மேலும் , திமுக கூட்டணியிலிருந்து ஒரு போதும் விலக மாட்டோம் என்று சொல்லிவிட்டு , “தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளது என்று சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்..இதற்கு பதிலடி தரும் வகையில் ஆர்.எஸ் பாரதி காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.. அவர் என்ன பேசினார் என்பது குறித்த தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்…!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மட்டும் விலகிய நிலையில், மற்ற கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தவெகவுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு எனவும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று உள்ள சூழ்நிலையில் திமுக கூட்டணியில் சிபிஐ இடம்பெற இயலாது என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி தொடர்பான முடிவை எடுப்போம். கூட்டணி அமைப்பதற்கான சூழல் தற்போது தமிழகத்தில் இல்லை. மக்களின் தீர்ப்புக்கு ஏற்றவாறு தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளோம்.

எங்களின் அரசியல் பகை என்றுமே பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் தான். திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் ஜனநாயக கட்சிகள். தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தவிர்த்து மற்றவர்கள் எங்களுக்கு நட்பு சக்தி தான். தற்போது உள்ள சூழலில் திமுக கூட்டணியில் சிபிஐ இடம் பெறும் சூழல் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூடும். அதில் எந்த ஜனநாயக அணியுடன் சேர வேண்டும் என்பது அப்போதைய சூழல் பொறுத்து முடிவு செய்யப்படும்.

இவரின் இந்த கருத்துக்கு , திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார்… திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவினை எடுத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி . நேற்றைய தினம் வரைக்கும் திமுக கூட்டணியில் தான் நாங்கள் தொடர்கிறோம். தமிழக வெற்றி கழகத்துக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்தது சிபிஐ. இதனிடையில் இன்றைய தினம் திமுக கூட்டணியில் தாங்கள் இல்லையென வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்களுடன் 1971 ஆம் ஆண்டு இருந்தது. பின்னர் பிரிந்து சென்றது. பிறகு போனது வந்தது என பலமுறை எங்களுடன் நட்புடன் இருந்து விட்டு போனார்கள். இன்னைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்து செல்கிறது. இப்போதைக்கு திமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். எப்போதைக்கும் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. திமுகவை பொறுத்தளவில் வந்தால் அவர்களோடு. வராவிட்டால் அவர்கள் இல்லாமல். அவர்கள் எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து தன் பயனத்தை திமுக் தொடரும். இதுதான் எங்களுடைய வரலாறு என தெரிவித்தார் ..

அதனை தொடர்ந்து அவரிடம் நேற்று வரைக்கும் தவெகவுக்கு வெளியில் இருந்து கூட்டணி என்றார்கள். இன்னைக்கு கூட்டணியில் வெளியேறுகிறோம் என்று சொல்லி இருக்கிறார். இந்த ஒரே நாளில் என்ன நடந்து இருக்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஆர்.எஸ். பாரதி அவர்களுக்கு ஒரு நாளில் ஏற்பட்ட சங்கடத்தை நீங்கள் தான் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.எங்களுடன் யார் இருந்தாலும், இல்லையென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் , சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பாக திமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வந்த கட்சிகள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன. ஏற்கனவே தவெகவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், தற்போது கூட்டணியில் இருந்தும் விலகி வருகின்றன…மற்றொரு பக்கம் திமுக தோல்வி குறித்து ஆராய்வதற்கு மு.க. ஸ்டாலின் நியமித்த கள ஆய்வு குழுவினரிடம், பெரும்பாலான நிர்வாகிகள் இனிவரும் தேர்தல்களில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி, அவர்கள் தேர்தல் முடிவுக்கு பின்பாக தங்களின் நிலைப்பாட்டினை மாற்றி கொள்கின்றனர். இதன் காரணமாக அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் இருந்து எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *