
K. Ponmudi | Madras HC | Suo moto | Case | Adjourned
பொன்முடி வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்...
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது. அமைச்சர் பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாகச் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன். மேலும் வழக்கு தொடர்பாகச் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொன்முடி பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

