Public Exam Dates: 10, 11 மற்றும் 12ஆம் பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

Advertisements

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கும், 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 26 ஆம் தேதியும் தேர்வு நடைபெறுகிறது.

பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுதோறும் நடைபெறும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். இதன் படி, 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது.  11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதிவரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி முடிவடையவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

அதே போல 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச்  26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறுகிறது. 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதிவரை நடைபெறுகிறது எனத் தெரிவித்தார். தேர்வு முடிவானது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்ளுக்கு மே 14 ஆம் தேதியும் 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு மே 10 ஆம் தேதியும் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *