பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்களின் ரூ.8 கோடி சொத்துக்கள் முடக்கம்.!

Advertisements

1000 கோடி ரூபாய் சட்ட விரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் 1000 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, நடிகர் சோனு சூட், நடிகை நேஹா சர்மா, நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் தாயார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, மிமி சக்ரவர்த்தி, சோனு சூட், நேஹா சர்மா, ஊர்வசி ரவுட்டேலாவின் தாய் உள்ளிட்டோரின் 7 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *