அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளதாக ஜெயக்குமார் பேச்சு.!

தான் முதலமைச்சர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான் என்றும் புதுமாதிரியான ஒன்று இல்லை என்றும் கூறினார். தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்றும் அவர் பேசிவருவதாகவும் தெரிவித்தார்.

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு விஜய் தனது சொந்தப் பணத்தில் தலா 1 கோடி ரூபாய் கொடுத்திருக்கலாம் என்றும். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல விஜயின் செயல் உள்ளது என்றும் விமர்சித்தார். முதல்வர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சிக்கு படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களை வஞ்சிக்கும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடு உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *