
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் நேற்று மஷாத் நகரில் நிறைவடைந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு நாட்டுப் படைகளுக்கு இடையே தற்காலிகமாக நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமாக முறிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திடீர் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். போர் சூழல் காரணமாக நீண்ட நாட்களாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த கமேனியின் இறுதிச் சடங்குகள், ஈரானின் முக்கிய நகரங்களில் கடந்த ஆறு நாட்களாக மத முறைப்படி நடைபெற்றன.
நேற்று மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத் தலத்தில், கமேனியின் மூத்த மகன் முஸ்தபா ஹொஸைனி தலைமையில் இறுதித் தொழுகை நடத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் அடா ஹஸ்னைன் உள்ளிட்ட சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் , இந்த உணர்ச்சிகரமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்திருக்கும் அறிவிப்பு சர்வதேச இராஜதந்திர வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது , ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது.. போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார். இப்படி டிரம்ப் மாற்றி மாற்றி பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.இன்றைக்
அணு ஆயுதம் இருக்கு.. அது இருக்கு, இது இருக்கு என.. ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்தியிருந்தார். விளைவு.. அணு ஆயுதம் ஒழிக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்டால்.. அதுதான் கிடையாது. அதற்கு பதில் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் ரேட் எகிறியதுதான் மிச்சம். அப்புறம் என்ன? உலக நாடுகள் சமாதானம் செய்து.. டிரம்ப்பை வழிக்கு கொண்டு வந்தன. எனவே ஈரானுடன் டீல் பேசினார். டீலில்.. ஈரான் அணு ஆயுதங்களை விட்டுவிட வேண்டும் என்றும், அதற்கு பதிலாக சர்வதேச அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிதியை விடுவிக்கிறோம் என்றும் சொல்லியிருந்தார்.
அவ்வளவுதான் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. பதிலுக்கு ஈரான் தாக்க.. மத்திய கிழக்கு முழுவதும் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
ஈரான் தான் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கேட்டதாகவும், அமெரிக்கா இதற்கு ஓகே சொல்லியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். என்னவோ செஞ்சிக்கோங்க.. போர் நிறுத்தம் வருமா வராதா? இந்தியாவில் பெட்ரோல், டீசல் ரேட் குறையுமா குறையாதா? E20க்கு ஒரு முடிவு வருமா வராதா? என்று இந்தியர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அதேவேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இது, அமெரிக்கா – ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடையப் போவதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னதாக, ஈரானின் அணு ஆயுத திட்டங்களை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்ததும், பதிலுக்கு ஈரான் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதும் மத்திய கிழக்கை நிலைகுலையச் செய்திருந்தன.
ஏற்கனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நடுத்தர மக்களைப் பாதித்து வரும் சூழலில், ‘E20’ எனப்படும் எத்தனால் கலப்பு எரிபொருள் திட்டத்தின் இலக்குகளை எட்டுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கவலையும் எழுந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர் அழுத்தங்களும், அதற்கு ஈரானின் ஆவேசமான பதிலடிகளும் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தை இந்தியா மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
“இறுதியாக நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். ஈரான் – அமெரிக்கா இடையிலான இந்த அதிகார மோதல், வெறும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான விவகாரம் மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த உலகளாவிய பொருளாதாரத்தின் உறுதித்தன்மையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணி. ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அடக்கம், ஒரு காலகட்டத்தின் முடிவு என்றாலும், அது பழிவாங்கும் எண்ணத்துடன் கூடிய ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், மத்திய கிழக்கின் அமைதி என்பது ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அழுத்தமான அரசியல் நகர்வுகளும், ஈரானின் ஆவேசமான பதிலடிகளும் உலகை எந்த திசையில் நகர்த்திச் செல்லும் என்பதை வரும் வாரங்களே தீர்மானிக்கும். ஆகவே வளைகுடாவில் அமைதி திரும்புமா? அல்லது மீண்டும் ஒரு போர்ச் சூழல் உருவாகுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.!



