உலகக் கோப்பை ஹாக்கி தொடர் – ஜெர்மனி சாம்பியன் பட்டம்..!

14 ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனி சிறப்பாக விளையாடி ஸ்பெயின் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 14 ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த, போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின.

இதில், ஜெர்மனி அணி சிறப்பாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைத் தட்டி சென்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *