பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்..திரையுரலகினர் இரங்கல்.!

Advertisements

லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக கொண்ட ஸ்ரீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்த ஸ்ரீனிவாசன் 225 படங்களில் நடித்துள்ளார்.

உடல் நல பிரச்னையால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீனிவாசன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது .தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஸ்ரீனிவாசன் ஒரு தேசிய விருது, இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் 6 முறை கேரள அரசு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *