ஈரானை எச்சரித்த டிரம்ப்: 1000 ஏவுகணைகள் தயார் – அதிரடி அறிவிப்பு..!

ஈரானை நோக்கி 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் குறிவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஈரான் போர் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், ஈரானை நோக்கி 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் குறிவைக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தன் உயிரைப் பறிக்க முயன்றால் ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழித்தொழிக்குமாறு அமெரிக்க ராணுவத்திடம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்படக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தில் அணுசக்தி தொடர்பான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *