
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக, மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு மாநில காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பொறுப்புகளை மாணிக்கம் தாகூரிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ்-சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். கே.அழகிரிக்கு பின்னர், கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
செல்வப்பெருந்தகையின் பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில், அவரே தலைமையிடம் தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்த நிலையில், மாணிக்கம் தாகூரை நியமித்து, தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இன்று மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றுக் கொண்டார்.





