பாகிஸ்தான், இஸ்லாமாபாத் சிறப்பு தனி நீதிமன்றம் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதம மந்திரியுமான இம்ரான் கானின் மேல்முறையீட்டு மற்றும் ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாட்டின் ரகசியங்களை கசியவிட்டதாக, சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.Imran Khan
இந் நிலையில் அம் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ஆமர் ஃபாரூக் இம்ரான் கானின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


