
குடியரசுத் தலைவர் திரௌபதி-முர்மு பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி, துணை குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் திரௌபதி- முர்மு, இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் ஜகுடியரசுத் தலைவர் திரௌபதி-முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி-முர்முவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட அவரது பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், இந்தியாவின் குடியரசுத்தலைவர் திரௌபதி- முர்முவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நலிந்த மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து, தேச சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்றும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கான அவரது குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு, நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



