பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!

தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியதைக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே பிரதமர் மோடி அடிக்கடி மறந்து விடுகிறார் என்று சுட்டிக் காட்டினார்.

இது, போன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்து விடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதையடுத்து, பா.ஜ.க.வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதைத் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பதும், தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும், பா.ஜ.க.வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *