
அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி, ரூபாய் 23-லட்சத்தை பெற்றுக்கொண்டு, மோசடி செய்த, தி.மு.க. அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியனை, காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில். அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செயல்பட்டார். மேலும், மின்சாரத்துறையும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதனிடையே, தனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூபாய் 23 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, ஏமாற்றியதாக, முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் மீது, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியனை, கடந்த 24-ஆம் தேதி கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 23 லட்சம் மோசடி செய்த வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 23 லட்சம் மோசடி செய்ததாக இளஞ்செழியன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 23 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



