தைப்பூசத் திருவிழாவுக்கு தலைவர்கள் வாழ்த்து!

Advertisements

தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா எனத் தமிழர்கள் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசத்தைக் கொண்டாடும் பக்தர்களுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்க் கடவுளான முருகனுக்கு நடத்தப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபடுவர்.

இன்று, தைப்பூசத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தைப்பூசத்தைக் கொண்டாடும் பக்தர்களுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,:

“தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா தைப்பூசம் ஆகும். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாகக் கொண்டாடும் திருநாள் இதுவாகும். தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலாப் பருவமும் ஒன்றாக வரும் நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா எனத் தமிழர்கள் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது. இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குத் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், :

“அசுர குலத்தை அழித்துத் தேவர்களைக் காத்த தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றிக் கொண்டாடும் இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு, ஒளி மற்றும் செழிப்போடு ஆன்மீக அற்புதங்களும் நிறைந்த இந்தப் புண்ணியத் திருநாளில் முருகப்பெருமானின் தெய்வீக அருள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், அளவில்லா மகிழ்ச்சியையும் வழங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *