அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா திடீர் சந்திப்பு!

Advertisements

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியும்,  தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீரின் நிலைமைகுறித்து முதல்-மந்திரி உமர் அப்துல்லா அமித் ஷாவுக்கு தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் தற்கொலை செய்துகொண்டு ஒருவர் மரணித்தது, வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் நிற்காததால் லாரி ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் நிலைமைகுறித்து உமர் அப்துல்லா அமித் ஷாஷாவுக்கு விளக்கமளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உமர் அப்துல்லா, அமித் ஷாவை வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய சேவைகள் மற்றும் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *