
2017ம் ஆண்டு வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘இட்டேஃபாக்’, இந்தப் படம் 1969ம் ஆண்டு வெளியான திரில்லர் படத்தின் ரீமேக்… மிஸ் பண்ணாம பாருங்க.
சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படங்களின் தீவிரமான ரசிகரா நீங்க? அப்போ இந்தச் செய்தி உங்களுக்கானதுதான்! அந்தாதுன் மற்றும் தலாஷ் போன்ற படங்களை நீங்கள் ரசித்திருந்தால், இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கவரும்.
1 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், இரண்டு கொலைகளுடன் எதிர்பார்த்திடாத திருப்பளங்களுடன் மர்மம் நிறைந்த படம்.
2017ம் ஆண்டு வெளியான ‘இட்டேஃபாக்’ படத்தைப் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்.
நகைச்சுவைப் படங்கள் சிரிக்க வைக்கும் அதே போலக் காதல் படங்கள் உணர்ச்சிபூர்வமாகவும், திகில் படங்கள் பயத்தை ஏற்படுத்தும் என்றாலும், சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் இவற்றிலிருந்து சற்று தனித்துவமானவை.
அவை பார்வையாளர்களைத் தங்கள் இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு மர்மமான உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
‘இட்டேஃபாக்’ படம் ரசிகர்களுக்கு இந்த அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும். இந்தப் படம் 1969-ம் ஆண்டு வெளியான இட்டேஃபாக் என்ற கிளாசிக் படத்தின் ரீமேக் ஆகும்.
அபய் சோப்ரா இயக்கிய இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் அக்ஷய் கன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தனது மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் சேத்தி (சித்தார்த் மல்ஹோத்ரா) மற்றும் கணவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மாயா சின்ஹா (சோனாக்ஷி சின்ஹா) ஆகியோரைச் சுற்றி இந்தக் கதை சுழல்கிறது.
இந்த இரண்டு வழக்குகளையும் விசாரிக்கக் காவல்துறை அதிகாரி தேவ் வர்மா (அக்ஷய் கன்னா) நியமிக்கப்படுகிறார், விசாரணையில் வெளியாகும் மர்மம், திகில், சஸ்பென்ஸ் ஒட்டுமொத்தமும் ரசிகர்கள் கணித்திடமுடியாத அளவிற்கு திரைக்கதை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.
