கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அமைச்சர்கள் அஞ்சலி.!

Advertisements

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாளையொட்டிச் சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர்களும் மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா சிலை அருகில் இருந்து பேரணியாகச் சென்று மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களிலும் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *