சென்னையில் வணிக சிலிண்டர் விலை 993/- ரூபாய் உயர்ந்து 3,237/- ரூபாயாக அதிகரிப்பு….!

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் நாளையொட்டி எரிவாயு சிலிண்டர் விலை நிலவரத்தை வெளியிட்டுள்ளன. இதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 237 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

தொடர்ந்து, 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தது. வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தலைநகர் தில்லியில் ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை 3 ஆயிரத்து 71 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 3 ஆயிரத்து 202 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *