ஜெயலலிதா திட்டங்கள் பாராட்டுக்குரியது – எஸ்.பி.வேலுமணி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தத் திட்டங்களை தற்போதைய அரசு கொண்டு வருவது பாராட்டத்தக்கது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தவெக அரசின் நிதிநிலை அறிக்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தத் தாலிக்குத் தங்கம் திட்டம் போன்ற சில திட்டங்களை கொண்டு வந்தது பாராட்டத்தக்கது என்று கூறினார்.
வருகின்ற காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், திமுக அரசு நிறுத்திய திட்டங்களை தற்போதைய அரசு கொண்டு வருவதாகவும், தவெக அரசுக்கு நேரம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார். நீங்கள் தவெகவில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல் குறித்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், சில பேர் நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாகப் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *