தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது: கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்!

Advertisements

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதை நிதிநிலை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது என திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு உணர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிப்பதாக விமர்சித்துள்ளார்.

மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? என்று வினவியுள்ளார்.  மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க செயல்படுத்தியதாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *