30 சதவீதம் குளறுபடி நடந்துள்ளதாக வழக்கறிஞர் இளங்கோ குற்றச்சாட்டு.!

Advertisements
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சுமார் 30 சதவீதம் குளறுபடி நடந்துள்ளதாக திமுக மூத்த வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தொடர்பான ஆய்வு குறித்து திமுக மூத்த வழக்கறிஞர் இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் ஆய்வு செய்யப்பட்டு, இன்று நிறைவடைந்தது.
அதில் வாக்குச்சாவடி எண் 208-இல், நோட்டா உட்பட மூன்று பேலட் யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், முதல் பேலட் யூனிட்டில் ஸ்டாலின் பெயர் இருந்தும், அந்த பேலட் யூனிட்டை, கண்ட்ரோல் யூனிட் அடையாளம் காணவில்லை என ஆய்வில் தெரியவந்ததாக கூறினார். மேலும், ஆய்வு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் சுமார் 30 சதவீதம் குளறுபடி நடந்துள்ளதாகவும் கூறினார்.
“இந்த விவகாரம் தொடர்பாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *