
இந்திய ஊடகங்களுக்கு முன்னால் பேச பிரதமருக்கு துணிச்சல் இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சில இளம் மாணவர்களுடன் உரையாடியதாகவும் அவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் குறித்து தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்தார். இந்திய ஊடகங்களுக்கு முன்னால் பேச அமித் ஷாவுக்கோ அல்லது பிரதமருக்கோ துணிச்சல் இல்லை என்று தெரிவித்தார்.
தில்லி வன்முறைக்குக் காரணமானவர், இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித் ஷா தான் என்றும் அவர் தான் இளம் பெண் மீது பெல்லட் துப்பாக்கியால் சுட உத்தரவிட்டதாகக் கூறினார். தேர்வு வினாத்தாள் கசிவுகள் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


