பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்……!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர்.

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
இதில், தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், அதிகாலை பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது, கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். தொடர்ந்து, கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும், விழாவையொட்டி, மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *