
கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக மாநில அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு பேசி வருவதாகவும், நிலம் கையகப்படுத்தப்பட்ட உடன் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் கோவை விமான நிலையத்தில் குறைந்த விலைச் சிற்றுண்டி உணவகம், மகளிர் சுய உதவி குழுவின் சார்பில் புவிசார் குறியீடு பெற்ற கோவை கோரா காட்டன் ஆடை விற்பனை அங்காடி, பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்கான சிறிய விளையாட்டுப் பகுதி, நூலகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, முரளிதர் மோகல், முருகன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ராமோகன் நாயுடு, பிரதமர் கோவை மாவட்டத்தின் மீதும் வளர்ச்சிக்காக மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக மாநில அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு பேசி வருவதாகவும், தேவையான நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்பட்ட உடன் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடங்கும் என்றும் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.




