20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி..!

Advertisements
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டியில் இலங்கையை  6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாம்பே அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையின் கொழும்புவில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை, ஜிம்பாம்பே அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாம்பே அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஜிம்பாம்பே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *