
தமிழக அரசியலில் முதுகில் குத்தி முன்னேறிய ஒருவர் என்றுதான் எடப்பாடி பழனிச்சாமியை பலரும் சொல்வார்கள். பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றி விட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்த போதே, பலரும் எச்சரித்தனர்.எடப்பாடி பழனிச்சாமி என்பவருக்காக அண்ணாமலையை பாஜக தலைமை பொறுப்பில் இருந்து மாற்றியது மிகப் பெரிய தவறு என்றும் கூறினர்.
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி யாருக்குமே நேர்மையாக இருந்தது கிடையாது. முதல்வராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலை வாறினார், ஓ பி எஸ் முதுகில் குத்தியவர், டி டி வி தினகரன் முதுகில் குத்தியவர், கடந்து 2024 நாடளுமன்ற தேர்தலில் பாஜகவில் முதுகில் குத்தியவர், இப்படிப்பட்ட ஒருவரை நம்பி மீண்டும் பாஜக கூட்டணி வைக்க கூடாது என பலரும் அறிவுறுத்தினர்.
ஆனால் , தமிழகத்தில் திமுகவை வீழ்த்தியே தீரவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்துடன் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றம் செய்து விட்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக உடன் கூட்டணி அமைத்தது பாஜக, ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. திமுக தோல்வியை தழுவி ஆட்சி மாற்றம் நடைபெற்றது,
ஆனால் பாஜக எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் இல்லை. விஜய் தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இப்படியொரு ஒரு முடிவு ஏற்படும் என்று பாஜக தலைமை எதிர்பார்க்கவே இல்லை.திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்கு எடப்பாடி உடன் பாஜக கூட்டணி அமைந்த நிலையில் , தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு , பாஜகவுக்கே தெரியாமல் திமுக உடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க எடப்பாடி முயன்ற செய்து டெல்லி பாஜக தலைமைக்கு சென்றுள்ளது.
இதனால், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவருக்கு எடப்பாடி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், திமுக உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அதிமுக முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, எடப்பாடி திட்டம் தோல்வியை தழுவியது, இதனை தொடர்ந்து எஸ் பி வேலுமணி, சி வி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையிலான பெரும்பாலனான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
இதனால், அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் வெடித்துள்ளது. அதிமுக கட்சி எடப்பாடி கைவசம் இருந்து எஸ் பி வேலுமணி தரப்புக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி கதவை தட்டி உதவி கேட்டு கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் டெல்லி கதவை திறக்க வில்லை.
மாறாக அமித்ஷா தரப்பை எடப்பாடி தொடர்பு கொள்ள முயன்ற போது, அங்கிருந்து கடுமையான வார்த்தைகள் பதிலாக வந்துள்ளன.
அமித்ஷா தரப்பில் இருந்து எடப்பாடியிடம் பேசியவர்கள், ”நீங்கள் திமுக உடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வர முயற்சி செய்தது எல்லாம் தெரியும், திரும்ப டெல்லி கதவை தட்ட வேண்டாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் எடப்பாடி மீது உள்ள கொடநாடு கேஸ் தூசு தட்டப்படுவதாகவும், இனி எடப்பாடிக்கு ஜெயில் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.பாமக ,பாஜக போன்ற கூட்டணி கட்சிகளின் உழைப்பால்தான் அதிமுக 47 இடங்களைப் பெற்றுள்ளது. இல்லையென்றால், 13 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கது என்கிற தகவலும் பாஜக தலைமைக்கு கிடைத்துள்ளது.
இதனால், எடப்பாடி மீது தமிழக மக்கள் முற்றிலும் நம்பிக்கையை இழந்து விட்டனர் என்பதையும் பாஜக உணர்ந்திருக்கிறது.
அதோடு, அதிமுக கூடாரம் கிட்டத்தட்ட காலியாக தொடங்கியுள்ளது. ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செம்மலை வெளியேறியுள்ளார்.
எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகர அதிமுக எம்ஜிஆர் இணைச் செயலாளர் கண்ணனும் அவரது மகன் சஞ்சய்யும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து இருவரும் இணைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தானாகவே அழிந்து விடும். எதிர்காலத்தில் திமுகவையும் அழித்து விட பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாம். இனிமேல், தமிழ்நாட்டில் தவெகவுடன்தான் நாம் அரசியல் செய்ய வேண்டும் என்கிற முடிவில் அமித்ஷா இருப்பதாக கூறுகிறார்கள்.



