கூட்டணிக் கட்சிகளுடன் மல்லுக்கட்டத் தயார்..!

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்துவதற்கு டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவைத் திமுக அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகியன இடம்பெற்றுள்ளன.
கடந்த முறை ஒதுக்கியதைவிட இந்த முறை அதிகத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்துவதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவைத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.இராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சைத் தொடக்க உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *