கோயம்புத்தூரில் மாநகராட்சிப் பூங்காவின் தொடக்க விழா.!

கோயம்புத்தூர் ஜி.சி.டி ரோட்டராக்ட் முன்னெடுத்து வரும் “ரெனோவேட் – இயற்கையைப் பேணுதல், வாழ்வை வளப்படுத்துதல்!” என்ற பூங்கா புதுப்பிப்புத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

சாய்பாபா காலனியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவைத் துப்புரவு செய்தல், மரக்கன்றுகள் செடிகள் நடுதல், பசுமைச் சூழல் அமைத்தல், அழகுபடுத்தல் உள்ளிட்ட பணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

விழாவை காட்வின் மரியா விசுவாசம் தொடக்கி வைத்தார். 69ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணன், ஆய்வாளர் சரவண குமார், விஜய் கிருஷ்ணன், பழனியப்பன், கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தத் திட்டத்தைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
பூங்காவைத் துப்புரவு செய்து அழகுபடுத்த ஒத்துழைத்த மாணவர்கள், ரோட்டரி சங்கம், விஜய் கிருஷ்ணா, கார்த்திக், கோவிந்தராஜ், சுபாஷ், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியோருக்கு ரோட்டராக்ட் கிளப் நன்றி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *