விடுதலை வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 89ஆவது நினைவையொட்டி மரியாதை!

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 89ஆவது நினைவு நாளையொட்டித் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவர் உருவச் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 89ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டித் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவர் உருவச் சிலைக்குத் தமிழகச் சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *