கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக இன்று நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கன மழை பொழியும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆதித்ய செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் 17 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோடியக்கரையில் 13 செண்டிமீட்டரும், திருக்குவளையில் 12 செண்டிமீட்டரும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் 11 செண்டிமீட்டரும், தலைஞாயிறு, திருப்பூண்டி ஆகிய இடங்களில் 9 செண்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *