
உலக முதியோர் தினம்
பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி. நம் வீட்டில் உள்ள முதியோர்களை நாம் அன்புடனும் ஆதரவுடனும் பார்ர்த்துக் கொள்ளவே அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
முதியோர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இத் தினத்தின் நோக்கமாகும். இன்றைய சூழலில் முதியோர்களுக்கு ஏற்படும் துன்பங்க்ள் சமூக பிரச்சினைகளாகி வருகிறது. லட்சக்கணக்கான முதியவர்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.
உடலளவில்லும், மனதளவிலும் , மிகவும் சோர்ந்து, தளர்ந்திருக்கும் அவர்களுக்கு பெற்ற பிள்ளைகளே ஆறுதலையும் , அரவணைப்பையும் அளிக்க வேண்டூம் . நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டவர்களை நாம் தான் பேணிக் காக்க வேண்டும். ஆனால் இன்றைய சமுதாயம் முதியோர் இல்லங்களில் விடுகின்றனர்.
கூட்டுக் குடும்பம் என்ற முறை மாறி தனிக் குடித்தனம் நடத்துகின்றனர் இன்றைய தலைமுறை. அதிகமான பெற்றோர்கள், தாங்கள் பெற்ற பிள்ளைகளால் பொருளாதாரம் மற்றும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இளைய தலைமுறையினரே, உங்களுக்கும் வயதாகும், நீங்களும் பிற்காலத்தில் ஒதுக்கப்படுவீர்கள் . எனவே நம் பெற்றோரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்..

