கொளத்தூரில் மீண்டும் தேர்தலா? – இவிஎம் மறுபரிசோதனையால் தமிழக அரசியலில் பரபரப்பு!

Advertisements

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் நான் தோற்கல. சூழ்ச்சி செய்து என்னை தோற்கடித்துவிட்டார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தவெக அதில் சூழ்ச்சி செய்திருப்பதாக காரணத்தை புட்டு புட்டு வைக்கிறார் திமுக நிர்வாகி என். ஆர். இளங்கோ.

மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு பல கட்சிகள் தாவிய தவெக வேட்பாளர் வி. எஸ். பாபுவிடம் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 14 வார்டுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது அதற்கு சட்டப்படி தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி, EVM சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

அப்படி ஒருவேளை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் குளறுபடிகள் நடந்திருந்தால், வி. எஸ். பாபுவின் வெற்றி செல்லாது என்றும் சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற இவிஎம் மறு பரிசோதனையில் பெரிய குளறுபடிகள் உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் திமுகவைச் சேர்ந்த என். ஆர். இளங்கோ.

இதுகுறித்து அவர் அளித்த செய்தியாளர் சந்திப்பு பற்றி விரிவாகப் பார்த்துவிடலாம்.

இவிஎமில் குளறுபடிகள் நடந்துள்ளதற்கான முழு ஆதாரம் தங்களிடம் உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பூத் 157-ல் நடைபெற்ற வாக்கு மறு பரிசோதனையில் எண்ணப்பட்ட 8 வாக்கு இயந்திரங்களில், 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும், 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் வைக்கப்படவில்லை என்றும், புதிய அட்ரஸ் டேக்ஸ் (Tags) உள்ளது என்றும் என்ற பரபரப்பு தகவலை முன்வைத்திருக்கிறார்.

தேர்தல் நடைபெறும்போது மொத்த வாக்குச்சாவடிகளிலும் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், சரியான பாதுகாப்பு இல்லை என்றும், தங்களால் அறிவுபூர்வமாகவும், சட்டரீதியாகவும் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் 30-ஆம் தேதி அறிக்கை கொடுத்துள்ளோம். அதில் நாங்கள் 19 வகையான கேள்விகளை எழுப்பியுள்ளோம். அந்த 19 வகையான எங்களது சந்தேகங்களை நாங்கள் இவிஎம் இயந்திரம் தயாரித்த பெல் நிறுவனத்தின் பொறியியல் அதிகாரிகளிடம் கேட்க அனுமதி வழங்குமாறும் அறிக்கை கொடுத்திருப்பதாக கூறினார்.

மேலும், இவிஎம் இயந்திரம் மறு பரிசோதனை செய்யப்பட்ட, அதாவது 29, 30, 31 முதல் வரை அனைத்து மறு பரிசோதனை செய்யப்பட்ட காட்சி பதிவுகளும் எடுக்கப்பட்டு பத்திரமாக வைக்கும்படி சொல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் குளறுபடிகள் நடந்திருப்பதற்கான முழு ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும், நாங்கள் முறைப்படி உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுகுவோம் என்று தெரிவித்தார்.

மேலும், இன்னும் ஆறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறு பரிசோதனை செய்ய இருப்பதாகவும், 30 சதவீதம் இயந்திரம் சரியில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த ஆய்வில் ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு அல்லது முரண்பாடு இருப்பது சட்டப்படி கண்டறியப்பட்டால், அதனை அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கான விண்ணப்பத்தையும் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். தற்போது இந்த ஆய்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான இந்தச் சோதனையின் முடிவுகளில் ஏதேனும் தவறுகளோ, குளறுபடிகளோ நிகழ்ந்திருந்தால், மீண்டும் அந்த தொகுதிக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான இந்தச் சோதனையின் முடிவு என்னவாகப் போகிறது? இந்த அரசியல் பரபரப்பு எத்தகைய திருப்பங்களைத் தரப் போகிறது? என்பதுதான் வேடிக்கையாக இருக்கபோகிறது.

ஒருவேளை இதில் தவெக சூழ்ச்சி செய்திருப்பார்களோ என்கிறார்கள் அரசியல் ஆசான்கள். ஆக கொளத்தூரில் ஸ்டாலின் கொத்து பரோட்டா ஆக போராரா அல்லது  மீண்டும் தேர்தல் வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *