ஊழலுக்கு செக் வைத்த முதலமைச்சர் விஜய் : லஞ்சம் கொடுத்தால் ₹1 லட்சம் சன்மானம்….!

Advertisements

சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, முதல் தேர்தலிலேயே 108 இடங்களை அள்ளி, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக ஆதரவுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய், நிர்வாகத் தூய்மையில் தற்போது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

கடந்த 16-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் உட்பட 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், நேற்று அனைத்து அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தில் தத்தமது அறைகளில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். பதவியேற்ற கையோடு, “அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும்” என கெடு விதித்திருந்த முதலமைச்சர் விஜய், தற்போது அதனை அடிமட்ட அளவில் அமல்படுத்தும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், பொதுமக்களிடம் வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட, அதனை ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முறையான ஆதாரத்துடன் லஞ்சப் புகாரை நிரூபிப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க வேண்டிய 24 மணி நேர கட்டணமில்லா எண்: 1800 425 1555

“மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொடமாட்டேன்” என்று உறுதியளித்துள்ள முதலமைச்சர் விஜய், ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல தினமும் உரிய நேரத்திற்குத் தலைமைச் செயலக அலுவலகத்திற்கு வந்து பணியாற்றி அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க இலக்கு வைத்துள்ள த.வெ.க. அரசின் இந்த அதிரடி ஆக்ஷன் பிளான், சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *