பிஎம்ஸ்ரீ திட்டம் : அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி…..!

பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்த அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, நாளை காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி இன்னும் வரவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய ராஜ்மோகன், பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்த அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று கூறினார். கொள்கை சமரசம்  செய்வது என்ற பேச்சிற்கே இங்கு இடமில்லை என்று தெரிவித்தார்.

ஆசிரியர்களின் பிரச்சனையை பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எல்லா துறைகளும் முதலமைச்சர் விஜய்க்கு முக்கியம்தான் என்று குறிப்பிட்டார். பள்ளி வாகனங்களை சரிவரை பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *