Advertisements

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜார்க்கண்ட் அரசு தேர்வுகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலைத் தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங், இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இதையடுத்து,
அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில அமைச்சர்கள் தீபிகா பாண்டே, இர்பான் அன்சாரி ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், தேர்வுகளை கண்காணிக்கவும், வினாத்தாள் கசிவைத் தடுக்கவும் கடுமையான சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்தினார்.
Advertisements



