
நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வருகின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் ரீசெண்டாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.
தங்கலான் படத்தில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தற்போது இந்தியா சினிமாவே கவனிக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தங்கலான் மற்றும் யுத்ரா படங்களில் மிகவும் பிரமிப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தன்மீதான கவனத்தை அதிகமாக்கினார். குறிப்பாக யுத்ரா படத்தில் செம கிளாமராக நடித்திருந்தார்.
யுத்ரா படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதுகூட, மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்தார். மேலும் மேடையிலேயே தனது உடையை அவர் சரிசெய்யும் காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டானது.
தங்கலான் இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்து ஹிந்தியில் அவரது யுத்ரா படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் மாளவிகா மோகனன்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் மாளவிகா மோகனனை 4.2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள்பின் தொடருகின்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் ட்ரஸ்ஸில் மாளவிகா மோகனன் அசத்தாலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து மளவிகாவின் அழகை புகழ்ந்து வருகின்றனர்.


