அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை.!

அமெரிக்காவுடன் ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் தனியார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஹோர்முஸ் நீரிணை மற்றும் பரந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க ஈரானிய அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏனெனில் கடினமான முடிவுகள் மீது ஈரான் முடிவெடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கும் என்று கூறினார்.
மேலும், ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்க கடற்படை முற்றுகையை உடைக்க தெஹ்ரான் “சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான” ராணுவத் தாக்குதலை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *