
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண், சங்கர் இயக்கத்தில் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இதைத்தொடர்ந்து, தற்போது ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 4-ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளது.
இச்சூழலில், ரசிகர்களைக் கவரும் வகையில் இப்படத்தின் அதிரடி டிரெய்லர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.





