2-வது நாளாக இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடக்கம்.!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டவாது நாளாக இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டவாது நாளாக இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில், இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைப் பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள். தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து உரையாற்றுவார்கள். நிறைவாக, துறைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.
மேலும் கடலூரில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் கிணறுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *