Sri Lanka vs India : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.!

இந்தியா, இலங்கை இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா, இலங்கை இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் காலே நகரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி முதலில் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 462 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167 ரன்களும், கே.எல். ராகுல் 82 ரன்களும் எடுத்தனர்.
பந்து வீச்சு தரப்பில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்களையும், கேஷாரா நுவாந்தா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்கள் குவித்தது.
இதில், அதிகபட்சமாக சோனல் தினுஷா 100 ரன்களும், நிரோஷன் டிக்வெல்லா 80 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் மாணவ் சுதார் 4 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் 178 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்று 2வது இன்னிங்சை தொடங்க உள்ளது.
ஆட்டத்தில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *